உக்ரைனில் மகன் கண்முன்னே பெண்ணுக்கு அரங்கேறிய மோசமான சம்பவம்!
உக்ரைனில் மகன் கண்முன்னே தாய் ஒருவர் ரஷ்யா துருப்புக்களால் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண், துப்பாக்கி முனையில் துஷ்யிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதுடன் தனது கணவர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாகவும் பாதிக்கபப்ட்ட அந்த இளம்தாயார் அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார். சம்பவம் குறித்து அப்பெண் கூறுகையில்,
கடந்த 8ஆம் திகதி நடந்துள்ளது. இது குறித்து 33 வயதான பெண் கூறுகையில், எங்கள் கிராமத்துக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்தனர். அதில் இரண்டு வீரர்கள் எங்கள் வீட்டிற்குள் வந்தனர். ஏன் இங்கு வருகிறீர்கள் என என் கணவர் கேட்ட நிலையில் கணவரை ரஷ்ய துருப்புக்கள் சுட்டு கொன்றனர்.
அதன்பின்னர் அழுது கொண்டிருந்த என் குழந்தையின் கண்முன்னர் போதையில் இருந்த இரண்டு பேரும் என்னை சீரழித்தனர். என்னை கொன்றுவிடலாமா என்றும் இருவரும் பேசி கொண்ட பின்னர் 20 நிமிடங்கள் கழித்து வெளியே சென்ற அவர்கள் மீண்டும் அங்கு அந்த என்னிடம் தவறாக நடந்து கொண்டனர்.
சம்பவம் நடந்து சில வாரங்கள் கடந்தவிட்டது, இருந்த போதும் தந்தை இறந்துவிட்டார் என்பதை என் மகன் உணராமல் உள்ளான். இந்நிலையில் நான் சீரழிக்கப்பட்டதையும், என் கணவர் கொல்லப்பட்டதையும் பொலிசில் புகார் கொடுத்துள்ளேன் என அப்பெண் கண்ணீருடன் கூறியுள்ளார்.
அதேவேளை உக்ரேனிய அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக விசாரிக்கப்படும் ரஷ்ய ராணுவத்தினரால் சீரழிக்கப்பட்டதாக கூறப்படும் முதல் வழக்கு இதுதான் என உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனிடிக்டோவா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.