சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாரா? புரளியின் பின்னணி அம்பலம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், அதன் உண்மை பின்னணி தற்போது அம்பலமாகியுள்ளது.
வடகொரியாவில் இருந்து எந்த தகவலும் வெளியே வராத நிலையில், அந்த நாடு பற்றியும், தலைவர் கிம் ஜோங் உன் பற்றியும் கட்டுக்கதைகள் நாளும் வெளிவந்த வண்ணம் உள்ளது. அது அமெரிக்க உளவுத்துறையின் செயல் என்றே சில ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் தற்போது சீனாவை சீண்டிப் பார்க்கும் முயற்சியாக, அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகளை உலவ விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் குடியிருக்கும் சீனப் பெண் ஜெனிபர் ஜெங் என்பவரே இந்த புரளிகளுக்கு எல்லாம் மூல காரணம் என தெரிய வந்துள்ளது. அவரது டுவிட்டர் பதிவில், சீன ராணுவத்தின் வாகனங்கள் செப்டம்பர் 22-ல் பெய்ஜிங்கை நோக்கிப் பயணிக்கின்றன.
இந்தப் பயணம் பெய்ஜிங் அருகிலுள்ள ஹுனலாய் கவுன்ட்டி எனும் இடத்தில் தொடங்கி ஹெபாய் மாநிலத்தின் ஜங்கிலோக்கோய் நகரம் வரை 80 கி.மீ. தொலைவுக்கு நீண்டுள்ளன.
அதேசமயம் அதிபர் ஜி ஜின்பிங்கை பிஎல்ஏ தலைவர் பதவியிலிருந்து சிசிபி(சீன கம்யூனிஸ்ட் கட்சி) தலைவர்கள் நீக்கிய பின் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி, அதே வேளை பெய்ஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் உள்நாட்டு விமானங்கள் வேறு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி அதிபரின் நிலை இதுவாக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாயின.
மேலும், சீன அரசில் முக்கியப் பதவியிலிருந்த 2 மூத்த அமைச்சர்கள் மற்றும் 4 உயரதிகாரிகளுக்கு ஊழல் வழக்கில் சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதாகவும், கொரோனா தொற்றை காரணம் காட்டி அதிபர் ஜின்பிங் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதையும் இணைத்து, சமூக ஊடகங்களில் புரளிகள் கிளப்பி விட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.