ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட யாஹ்யா சின்வார்!
ஹமாஸ் ஆயுதக் குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான், தெஹ்ரானிலுள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளார்.
இக் கொலையை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்த நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவின் காசா முனை பிரிவுக்கு மட்டும் தலைவராக செயற்பட்டு வந்த யாஹ்யா சின்வார் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் ஆயுதக் குழு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.