பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளில் தற்போதைய காலநிலையானது மிக மோசமாக காணப்படுகின்றது.
பிரித்தானியாவின் மெட் அலுவலகம் பனி மூட்டத்திற்கான மஞ்சள் எச்சரிக்கையை இங்கிலாந்தின் பெரும் பகுதிகளுக்கும் வேல்ஸின் சில பகுதிகளுக்கும் வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படும் இந்த பனி மூட்டம் சில பகுதிகளில் "அடர்த்தியாக" இருக்கும் என்றும் மேலும் "100 மீட்டருக்கு குறைவான தெரிவுநிலை" இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவான எச்சரிக்கை தெற்கில் எக்ஸெட்டர்(Exeter) மற்றும் கார்டிஃபிலிருந்து(Cardiff) வடக்கில் ஹல்(Hull) வரை நீண்டுள்ளது, ஆக்ஸ்போர்டு(Oxford), பீட்டர்பரோ(Peterborough), பர்மிங்காம்(Birmingham) மற்றும் லிங்கன்(Lincoln) போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கியது.
வியாழக்கிழமை காலை 11 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படவும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் சாலை நிலைமைகளை சரிபார்க்கவும், அவர்களின் பனி விளக்குகள் சரியாக செயல்படுவதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புகைமூட்ட நிலைமை பேருந்து, ரயில், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை பாதிக்கக்கூடும் என்று மெட் அலுவலகம் எச்சரித்துள்ளது.
வானிலை நிகழ்வுக்கு முன்னதாக, பிரித்தானியாவில் வெப்பநிலை கிட்டத்தட்ட -20°C வரை குறைந்த குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதன் விளைவாக, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.