சுவிட்சர்லாந்தில் ப்ராங்க் செய்ய முயன்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!
நேற்று முன்தினம் காலை, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள Sécheron ரயில் நிலையத்தில், ப்ராங்க் செய்வதற்காக இளம் ஜோடி ஒன்று மின்சார ரயில் மீது ஏறியுள்ளது.
அப்போது அந்த இளம்பெண் தெரியாமல் தன் தலைக்கு மேல் சென்ற மின்சார கேபிளைத் தொட்டிருக்கிறார்.
அந்த பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாக, அந்த பெண்ணைத் தொட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞர் மீதும் மின்சாரம் பாய, அவர் படுகாயமடைந்துள்ளார்.
அந்த இளைஞர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் Lausanne பல்கலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ப்ராங்க் செய்வதற்காக ஏடாகூடமாக செய்த செயலால் அந்த 18 வயதேயான இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது பொலிஸார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.