காதலியை கொன்று உடலை சுவற்றில் பதுக்கிய இளைஞர்; மூன்று மாதங்களில் பின்னர் சிக்கினான்
இந்தியாவில் காதலியை கொன்று வீட்டில் சுவற்றுக்குள் வைத்து பூசி மறைத்து வைத்து பிணம் இருந்த வீட்டில் கடந்த 3 மாதமாக வசித்துவந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயதுடைய அனிதா மோஹிதே. Boisar-ல் உள்ள மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் (MIDC) வேலைபார்த்துவந்த இவர், அதே அலுவலகத்தில் பணியாற்றிவந்த 30 வயது மிக்க ஒரு ஆணைக் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளார்.
இந்த நிலையில், அனிதா கடந்த அக்டோபர் மாதம் முதல் காணவில்லை. அவரது உறவினர்களும் எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர், ஆனால் அவர்களின் தேடல் வீணானது. இதற்கிடையில், அவர் கடைசியாக ஆக்டொபர் 21-அம திகதி அவரது காதலனுடன் ஷாப்பிங் சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து, அனிதாவின் சகோதரர்கள் அந்த நபரை தேடியுள்ளனர்.
பிறகு ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்த உறவினர்கள், அனிதா எங்கே எனக் கேட்க, அவர் குஜராத்தில் உள்ள வாபி எனும் இடத்தில் வசித்துவருவதாக கூறியுள்ளார். மேலும், உறவினர்களை நம்ப வைப்பதற்காக அனிதாவின் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் வாட்ஸஅப்பை பயன்படுத்தி, அவர் குஜராத்தில் உயிருடன்தான் இருக்கிறார், தன்னுடன் தொடர்பில் இருக்கிறார் எனக் கூறி சாட்டிங் செய்துள்ளதை ஆதாரமாக காண்பித்துள்ளார்.
ஆனால், தொடர்ந்து அனிதாவைப் பற்றி விசாரித்தபோது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துளார். இதனால் சந்தேகப்பட்ட அனிதாவின் சகோதரர்கள் அவனைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.
பொலிஸ் அவனை விசாரித்தபோது தான் உண்மை வெளிவந்தது. அவன் கடந்த 5 வருடமாக அனிதாவை காதலிப்பதாக, தொடர்ந்து அவரிடமிருந்து பணத்தை வாங்கி செலவு செய்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில் அனிதா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்த்தியதால் கடுப்பான அவன், அனிதாவை தனது வீட்டிற்கு கூட்டிவந்து கொலை செய்துள்ளான்.
பிறகு சடலத்தை அதே வீட்டில் சுவற்றுக்குள் வைத்து பூசி மறைத்து வைத்து பிணம் இருந்த வீட்டில் கடந்த 3 மாதமாக வசித்துவந்துள்ளான்.
இந்நிலையில், அவன் கைது செய்யப்பட்டு, அவன் மீது IPC சட்டம் 363, 302 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அனிதாவின் உடல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.