அமெரிக்காவில் மூவரை சுட்டு கொன்ற இளைஞனின் விபரீத முடிவு!
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், ஒரு நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யகீமா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடையொன்யின் உள்ளேயும் வெளியேயும் நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்.
தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் 21 வயதான ஜெரீட் ஹெட்டொக்(Jared Hatdock) என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை 72 வயதான ஒரு நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
அதே மாநிலத்தில் திங்கட்கிழமை 67 வயதான நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.