வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி!
வட அயர்லாந்தின் மேற்கு பெல்பாஸ்டில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் 31 வயதுடைய நபரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு அயர்லாந்தின் மேற்கு பெல்பாஸ்டில் உள்ள கிரீன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற PSNI முக்கிய புலனாய்வு குழுவின் துப்பறியும் அதிகாரிகளால், பாதிக்கப்பட்டவர் ஹோலி தாம்சன்(Holly Thompson) என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஹோலி தாம்சன்(Holly Thompson) (28) கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 31 வயதுடைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக துப்பறியும் இன்ஸ்பெக்டர் மிச்செல் கிரிஃபின் தெரிவித்த தகவலில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது, அதில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் கருதுவதாக தெரிவித்தார்.
மேலும் தற்போது இது தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து இருப்பதாகவும், அவர் ”ஏ” வகுப்பு கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை விநியோகிப்பதில் அக்கறை கொண்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் தற்போது பெல்பாஸ்டில் உள்ள மஸ்கிரேவ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் துப்பறியும் நபர்களுக்குத் தங்கள் விசாரணையில் உதவக்கூடிய தகவல் இருந்தால் பொதுமக்கள் 101 இல் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.