16 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி... 40 ஆண்டுகளில் முதல்முறை
கடந்த 40 ஆண்டுகளில் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இளையவர் என்ற பெருமையை 16 வயது பெண் ஒருவர் பெற்றுள்ளார்.
Vivian Xie என்பவரே 16 வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர். ரொறன்ரோ பல்கலைக்கழகத்திற்கு மாறுதல் பெறும் முன்னர், அவரது கல்வியானது பிரின்ஸ் எட்வர்ட் தீவின் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.
அங்கே அவர் உயிரியல் பாடத்தில் இரட்டை பட்டம் பெற்றார். உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு யாரும் தம்மை அதிகமாக கவனித்திருக்கவில்லை எனவும், இதனால் கடைசி நான்கு ஆண்டு பல்கலைக்கழக பயணம் உண்மையில் மிகவும் சாதாரணமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கல்வி மீதான தமது நாட்டம் எதுவரை என்பதும் அது எங்கே தம்மை அழைத்து செல்லும் என்பதும் முடிவு தெரியாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.