திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பெண் ; கொலை செய்தவருக்கு மரண தண்டனை
திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பெண் தோழியை கற்பழித்து கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்த ஜாகிர் ஜாபரின் மரண தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அமெரிக்கரான ஜாகீர் ஜாபர், தனது பெண் தோழியான நூர் முகதமிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது நூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வீட்டில் வைத்து அரங்கேறிய கொடூரம்
இதனால் பெண் தோழியை இஸ்லாமாபாத்தில் உள்ள வீட்டில் வைத்து கொடூரமாக தாக்கியதுடன் கற்பழித்துள்ளார். அதோடு விடாமல் பெண் தோழியின் கழுத்தை துண்டான வெட்டி கொலை செய்துள்ளார்.
வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று, ஜாகிர் ஜாபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜாகிர் ஜாபர் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.
நூர் முன்னாள் தூதரின் மகள் ஆவார். ஜாகீர் ஜாபரின் பிடியில் இருந்து தொடரந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரது வீட்டில் வேலை செய்யும் இருவரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது முன்கூட்டியே திட்டமிட்டது என விசாரணையின்போது ஜாகிர் ஜாபர் ஒப்புக்கொண்டார்.
கற்பழிப்பு மற்றும் கொலை செய்த வழக்கில் ஜாபருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டதுடன், உடந்தையா இருந்த வீட்டு வேலைக்காரர்கள் இருவருக்கு தலா 10 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.