இந்தியப் பிரதமரின் கோரிக்கையை நிராகரித்த செலென்ஸ்கி!
ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்த நிலையில், யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) மறுத்துள்ளார்.
யுக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
யுக்ரைன் இராணுவமும் பதில் தாக்குதல் நடத்துவதால் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். போரை நிறுத்த பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.
தற்போது யுக்ரைனிடமிருந்து கைப்பற்றிய 4 நகரங்களை ரஷ்ய தனது நாட்டுடன் இணைத்துள்ளது. இதற்கிடையே ஐ.நா.வில் யுக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக நடைபெறும் அனைத்து வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்து நடுநிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், யுக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, “ரஷ்யா-யுக்ரைன் போரில் அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்து ஏற்படுவது சுற்றுச்சூழலுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.
போரை நிறுத்துவதற்கு இராணுவம் மூலம் தீர்வு காண முடியாது, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தொடங்குவது அவசியம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மோடியின் கோரிக்கைகு பதிலளித்துள்ள செலென்ஸ்கி(Volodymyr Zelenskyy), யுக்ரைனின் நான்கு நகரங்களை சட்டவிரோதமாக ரஷ்யா இணைத்துள்ள சூழலில், ரஷ்யாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த யுக்ரைன் தயாராக இல்லை என்று பதிலளித்துள்ளார்.
மேலும், யுக்ரைனுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) நன்றி தெரிவித்துள்ளார்.