பிரித்தானியாவில் கொரோனா கோரத்தாண்டவம்: ஒரே நாளில் 1,610 பேர் உயிரிழப்பு!
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரேநாளில் அதிகபட்ச அளவாக மேலும் 1,610 பேர் பலியாகி உள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 9.62 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 20.55 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் இங்கிலாந்தில் தகவமைத்துக்கொண்ட புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அங்கு அதிகரித்து வந்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 5-வது இடத்தில் இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 33,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 34,66,849 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் அதிகபட்ச அளவாக மேலும் 1,610 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 91 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக அங்கிருந்து வரும் விமானங்களுக்கு பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.