பலஸ்தீனை அங்கீகரிக்க மாட்டோம் ; ஜேர்மனியின் சான்சலர்
பலஸ்தீனை ஒரு சுதந்திர நாடாக ஜேர்மனி அங்கீகரிக்காது என ஜேர்மனியின் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய பிரதமர் மார்க் கார்னியுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
கனடா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் பலஸ்தீனை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
இருப்பினும், நேற்று நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், பலஸ்தீன் தனது நாடு முன்வைத்த நிபந்தனைகளை இன்னும் முன்வைக்காததால், அதை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க முடியாது என்று ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.