இந்தியாவுக்கான 50 சதவீத வரி இன்று முதல் அமுலுக்கு
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதித்த 50% வரி இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 50% ஆக உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை அமுல்படுத்துவதற்கான வரைவு அறிவிப்பை அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 50% வரி
அமுலாக உள்ள இந்த வரைவு அறிவிப்பில், நிர்வாக உத்தரவுக்கு ஏற்ப அமெரிக்காவின் இணக்கமான கட்டண அட்டவணையை (HTSUS) மாற்றியமைக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வரிகள் இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் அமுலுக்கு வரும் இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50% வரி குறித்து பேசிய இந்திய பிரதமர் மோடி, “எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதைத் தாங்கும் வலிமையை நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம். என்று கூறியுள்ளார்.