கனடாவில் கார் விபத்து — 21 வயது இளைஞர் உயிரிழப்பு
கனடாவின் கலிடன் (Caledon) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து, Bramalea சாலை மற்றும் Boston Mills சாலை அருகே, Hurontario வீதிக்கு கிழக்கே அதிகாலை 1:30 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்துள்ளதாகவும் விபத்தில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் மற்றுமொரு 20 வயதான இளைஞர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்கான விசாரணை முடியும் வரை Bramalea வீதி, King Street முதல் Boston Mills வரையிலான பகுதி பல மணி நேரத்திற்கு மூடப்பட்டிருந்தது.
தற்போது அந்த சாலை மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான தகவல்கள் அல்லது Dashcam காட்சிகள் உள்ளவர்கள், Caledon OPP-யை 1-888-310-1122 என்ற எண்களில் அல்லது Crime Stoppers வழியாக இரகசியமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.