கனடாவில் பனிப்பாறை சரிவில் ஏற்பட்ட சோகம்
கனடாவில் பனிப்பாறை சரிவில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவின் வடக்குப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அலஸ்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்கினா மலைத்தொடரில் மலையேறிக் கொண்டிருந்தவர்கள் இவ்வாறு பனிப்பாறை சரிவில் சிக்கியுள்ளனர்.
ஐந்து பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு பனிப்பாறை சரிவில் சிக்குண்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு மீட்புப் பணியாளர்கள் இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.
மாகாணத்தில் இந்த ஆண்டில் பனிப்பாறை சரிவினால் பதிவான 13ம் மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பனிப்பாறைகளில் மலையேறுதல் பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபடும் போது மிகுந்த நிதானம் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.