டொரண்டோவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு, ஐவர் காயம்
கனடாவின் டொரண்டோவின் லோரன்ஸ் ஹெய்ட்ஸ் Lawrence Heights பகுதியில் ஜூன் 3, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஆண் உயிரிழந்தார், மேலும் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு குறித்து அவசர சேவைக்கு இரவு 8.30 மணியளவில் அழைப்பு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, பௌமிங்டன் Flemington மற்றும் ஸாசெரி Zachary வீதிகள் அருகே, Allen சாலைக்கு ஒட்டியுள்ள ஒரு உயர்மாடி குடியிருப்பின் பின்புற சந்தியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என போலீஸ் உயர் அதிகாரி பகிர் சர்வநந்தன் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த மற்ற ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றனர்.
அவர்கள் வாகனத்தில் தப்பினரா என்பது குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித அச்சறுத்தல்களும் கிடையாது என அதிகாரி சர்வநந்தன் தெரிவித்துள்ளார்.