கனடிய மக்களின் வீடுகளில் இப்படி ஒரு ஆபத்தா?
கனடாவில் வாழ்ந்து வரும் மக்களின் வீடுகளில் ஆபத்தான எரிவாயு வாயு ஒன்றின் தாக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கரி பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடியர்கள் அதிக அளவில் கதிரியக்க தாக்கத்திற்கு உள்ளாகும் வாயு வெளியீட்டினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கதிரியக்க தாக்கத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் சுமார் 10 மில்லியனுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை விடவும் கூடுதல் அளவான கதிரியக்க தாக்க வாயு வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடாவின் சுமார் 20 வீதமான வீடுகளில் கதிரியக்க தாக்க வாயு கூடுதல் அளவில் வெளியானதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடுகளை நிர்மாணிக்கும் போது ஏற்படும் இடைவெளிகள், கட்டுமானத்தின் போதான அமைப்புக்கள் காரணமாக இவ்வாறு இந்த வாயு வெளியேறுவதாகவும் குறிப்பாக காற்றோட்ட தன்மையின் அடிப்படையில் இந்த வாயுவின் அளவு மாறுபடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலத்திற்கு இந்த ராடோன் வாயுவை சுவாசிக்க நேரிட்டால் அது புற்றுநோயை ஏற்படுத்த கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.