10 ஆண்டுகளாக நாடுநாடாகச்சென்று தேனிலவு கொண்டாடும் அமெரிக்க தம்பதி!
பொதுவான திருமணமாக புதுமணத் தம்பதிகள்தான் குளிர்பிரதேசங்களுக்குச் சென்று தேனிலவு கொண்டாடுவர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதி நீண்ட காலம் அதாவது கடந்த பத்தாண்டுகளாக தேனிலைவைக் கொண்டாடி வருகின்றமை ஆச்சர்யத்தை ஏற்படுத்துயுள்ளது.
அமெரிக்கா நட்டில் உள்ள நியூ ஜெர்சியில் வசித்து வரும் தம்பதி மைக் ஹாவர்ட் – ஆன். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2012 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தை அடுத்து, மைக் ஹஹார்ட் – ஆன் இருவருக்கும் சுற்றுப்பயணத்தின் மீது விருப்பம் அதிகம் என்பதால், முதல் தேனிலவு கொண்டாடினர்.
தொடர்ந்து இது தொடரவே, தேனிலவுக்காக வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பயணம் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தற்போது ஆசிய கண்டமாக இந்தியாவில் முகாமிட்டுள்ள இந்த தம்பதி, கேரளாவில் தேனிலவு கொண்டாடி வருகின்றனரா.
அவர்கள்து புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் தம்பதிகளின் செயல் நெட்டிசன்களை வாய்பிளக்கவைத்துள்ளது.