பிரான்ஸில் 100 மில்லியன் முகக்கவசங்கள் எரிப்பு!
பிரான்ஸில் சேமிப்பகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்ட 100 மில்லியன் முகக்கவசங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த முகக்கவசங்கள் காலாவதி ஆனதை அடுத்து அவை அழிக்கப்பட்டுள்ளன. Gironde மாவட்டத்தின் Canéjean நகரில் உள்ள சேமிப்பகம் ஒன்றில் மேற்படி முகக்கவசங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதற்காக அரசாங்கள் ஒதுக்கியிருந்த முகக்கவசங்களே அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் காலாவதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து அவை எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கொவிட் 19 தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்துவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.