காசாவில் பிறக்காத சிசுவின் உயிரை மீட்ட மருத்துவர்கள்
காசாவில் பிறந்த சிசுவொன்றை இறந்த தாயின் வயிற்றிலிருந்து மீட்ட மருத்துவர்கள் இந்த சிசுவின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
காசா நகரில் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் டயானா மற்றும் ஓமர் அல்-ருபாய் தம்பதியினர் உயிரிழந்தனர்.
சில நாட்களில் அவர்களின் குழந்தை பிறக்க இருந்தது. டயானா தாக்குதலில் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் உயிரிழந்தார்.
முன்கூட்டியே பிரசவிக்கப்படும் குழந்தைகள்
மருத்துவர்கள் அவசர சிசேரியன் சிகிச்சை செய்து, கருவறையில் இருந்த ஆண் குழந்தையை உயிருடன் எடுத்தனர்.
குழந்தைக்கு ஹம்ஸா என்ற பெயர் சூட்டப்பட்டதகாவும் இதையே சிசுவின் தந்தை விரும்பி இருந்ததாக கூறப்படுகிறது.
ஹம்ஸா ஆக்சிஜன் குறைவுடன் பிறந்தாலும் தற்போது நிலை சீராக உள்ளது, விரைவில் நியோநேட்டல் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து (NICU) வெளியேற்றப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது காசாவில் முதல் சம்பவம் அல்ல. “இங்கே பல கர்ப்பிணிகள் தாக்குதல்களில் காயமடைந்து, குழந்தைகள் முன்கூட்டியே பிரசவிக்கப்படுகின்றனர்.
இது தாயும், குழந்தையும் உயிரிழக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது,” என அல்ஹெலூ மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் சியாத் அல்-மஸ்ரி கூறியுள்ளார்.
ஹம்ஸா என்ற இந்த சிசுவின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். போரின் இரண்டாண்டுகளில் 64,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், யூனிசெஃப் மதிப்பீட்டின் படி 50,000 குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ உள்ளனர்.