சீனாவில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி 11 பேர் காயம்
சீனாவின் கன்சு (Gansu) மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி 11 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சீனாவின் கன்சு மாகாணத்தின் லாங்சி (Langxi) மாவட்டத்தில் நேற்று அதிகாலை, 5.6 மெக்னிடியூட் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதில், 17 வீடுகள் இடிந்து வீழ்ந்தன.
3,500க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்தன. லாங்சி மற்றும் ஜாங்சியன் மாவட்டங்களில் சுமார் 7,800 பேர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.