இந்தியா தொடர்பில் அமெரிக்காவின் கணிப்பு சாத்தியமாகுமா?
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும் என்றும் கோதுமை உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் கணிப்பிட்டுள்ளது.
அதன்படி, நடப்பு 2025-26ம் ஆண்டு பருவத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி 15.2 கோடி டன்களை எட்டும் என்றும் அமெரிக்கா மதிப்பிடப்பட்டுள்ளது.

குளிர்கால பயிரான கோதுமையின் உற்பத்தி, கடந்தாண்டு 11.3 கோடி டன்னாக இருந்த நிலையில், புதிய ஆண்டில் 11.7 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபரங்களை அமெரிக்க விவசாயத்துறை, செயற்கைக்கோள் ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
அதேவேளை முன்னதாக, 2026 இல் அரிசி உற்பத்தி 12.4 கோடி, டன்களாக இருக்கும் என்று இந்திய மத்திய அரசாங்கம் மதிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.