கனடாவில் சகோதரனை கொலை செய்ய முயற்சித்ததாக 12 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு
கனடாவின் லெத்த்பிரிட்ஜில் 7 வயது தம்பியை கொலை செய்ய முயன்றதாக 12 வயது சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் லெத்த்பிரிட்ஜில் தன் 7 வயது தம்பியை குத்தி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 12 வயது சிறுவன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இளையோர் சட்டத்தின் கீழ் சிறுவனின் அடையாளம் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ காணொளி
அவர் எட்மன்டன் மருத்துவமனையில் இருந்து வீடியோ காணொளி மூலம் லெத்த்பிரிட்ஜ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவரது வழக்கறிஞர், கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.
ஆகஸ்ட் 27 அன்று இரு சகோதரர்களும் வீட்டில் தந்தை கடைக்குச் சென்றிருந்ததால் தனியாக இருந்தனர்.
அந்த நேரத்தில் 12 வயது சிறுவன் கோபமடைந்து, தம்பிக்கு தீங்கு செய்ய வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
7 வயது தம்பி பயந்து ஒரு அறைக்குள் ஓடி, போர்வைக்குள் மறைந்துள்ளான் பின்னர் மூத்த சகோதரன் சமையலறையில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு, அறைக்குள் சென்று தன் தம்பியை ஒன்பது முறை குத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் சிறுவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீதிபதி இந்த வழக்கை பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைத்துள்ளார்.