கனடாவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 12 வயது சிறுமிக்கு நேர்ந்த நிலை!
கனடாவின் ஹாலிவுட் பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 12 வயதான சிறுமி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹாலிபெக்ஸ் போலீசார் குறித்த சிறுமியை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
15 வயதான மற்றும் ஒரு சிறுமியை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் குறித்த சிறுமி படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு சிறுமியருக்கும் இடையில் மோதல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மில்வுட் மற்றும் மிடில்ஷட்வில் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமிகள் பற்றிய எந்த விதமான விவரங்களும் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.