லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமைக்கு ஹமாஸ் கண்டனம்
லொபனான் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியமைக்கு ஹமாஸ் இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் வசிக்கும் மிகப்பெரிய முகாம்களில் ஒன்றான ஐன் அல்-ஹில்வே (Ein el-Hilweh) மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஹமாஸ் கடுமையாக கண்டித்துள்ளது.
இந்த தாக்குதல் ஒரு “கொலைவெறி தாக்குதல்” எனவும், அதற்கான முழுப் பொறுப்பும் இஸ்ரேல் பிரதமர் பென்யமின் நெத்தன்யாகுவின் அரசுக்கு உள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் லெபனானிலுள்ள பாலஸ்தீன அகதிகளை நேரடியாக குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது மனிதத்தன்மைக்கு எதிரான குற்றம் என்றும், பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் செய்யும் குற்றப் பதிவு மேலும் நீளுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், பாலஸ்தீன அகதிகளின் வலிமையை சிதைக்கவும், அவர்களின் திரும்பிச் செல்லும் உரிமையை பாதிக்கவும், அகதி முகாம்களின் சமூக மற்றும் தேசிய நிலைத்தன்மையை குலைக்கவும் இஸ்ரேல் மேற்கொள்ளும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினரால் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 13 பேர் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.