எட்மோன்டனில் 14 வயது பாடசாலை மாணவன் மீது கொலைக் குற்றச்சாட்டு
எட்மோன்டனில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
14 வயதான மாணவன் ஒருவன், சக மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஏழு பாடசாலை மாணவர்களுக்கு தொடர்பு உண்டு என முன்னதாக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
எனினும் பின்னர் ஆறு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விலக்கிக்கொள்ளப்பட்டன. மெக்னேலி உயர்நிலைப் பள்ளிக்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதலில் 16 வயதான மாணவன் ஒருன் கொல்லப்பட்டான்.
குறித்த மாணவனுக்கு எதிராக மட்டும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் திருப்தி கொள்ள முடியாது என குடும்ப உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் இந்த சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அதில் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 11ம் திகதி இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் மீளவும் நடைபெறவுள்ளது.
16 வயதான கர்னவீர் சஹோடா (Karanveer Sahota ) என்ற சிறுவன் சம்பவத்தில் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.