80,000 விசாக்கள் இரத்து செய்த ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கை காரணமாக இந்த பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரத்துச் செய்யப்பட்ட விசாக்கள்
டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இதுவரை சுமார் 80,000 குடியேற்றமற்ற விசாக்களை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செல்லுபடியாகும் விசாக்கள் வைத்திருந்தவர்கள் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடுகடத்த வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 16,000 விசாக்களும், வன்முறையில் ஈடுபட்டமைக்காக 12,000 விசாக்களும், திருட்டு சம்பந்தமான குற்றச்சாட்டில் 8,000 விசாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் நிராகரிக்கப்பட்ட மொத்த விசாக்களில், இந்த மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரத்துச் செய்யப்பட்ட விசாக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகக் குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.