சிறுவனின் அச்சுறுத்தலினால் கனடாவில் மூடப்பட்ட பாடசாலைகள்
14 வயதான சிறுவன் ஒருவனினால் விடுக்கப்பட்ட தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[GTYR3 ]
பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக குறித்த சிறுவன் எச்சரிக்கை விடுத்துள்ளான். ஸ்காப்ரோவின் எல்ஸ்மேர் மற்றும் மார்க்கம் வீதிகளுக்கு அருகாமையில் துப்பாக்கியுடன் ஒருவர் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்த தகவலை அடுத்து குறித்த பகுதியில் அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளை மூடக்கி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் பின்னர் முடக்க உத்தரவு தளர்த்தப்பட்டது.
இந்த இரண்டு பாடசாலைகளில் ஒரு பாடசாலையைச் சேர்ந்த மாணவனே இந்த விபரீத விளையாட்டை மேற்கொண்டுள்ளான் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுவனிடமிருந்து விளையாட்டு துப்பாக்கியொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.