காசாவில் உணவிற்காக காத்திருந்த 1000 பலஸ்தீனர்கள் பலி
காசாவில் உணவிற்காக காத்திருந்த சுமார் ஆயிரம் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மே மாதத்தின் முடிவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான உதவித் திட்டத்துக்குப் பின்னர், உணவுப் பொருட்களைப் பெற முயற்சித்த போது இஸ்ரேலிய படைகளால் 1,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூலை 21 நிலவரப்படி, உணவு பெற்றுக்கொள்ள முயற்சித்தபோது 1,054 பேர் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் 766 பேர் காசா மனிதாபிமான நிலையங்களின் அருகிலும், 288 பேர் ஐ.நா மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகளின் உதவிக்கூட்டங்கள் அருகிலும் கொல்லப்பட்டனர்" என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் சார்பில் தமீன் அல்-கீத்தான் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அண்மைய தாக்குதல்களில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 43 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில் 10 பேர் உதவி பெற முயற்சித்தவர்கள் எனவும், இஸ்ரேலிய ராணுவம் டெய்லு எல் பாலாஹ் Deir el-Balah நகரத்தின் தெற்குப் பகுதியில் முதன்முறையாக நுழைந்ததற்குப் பின் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேல் மேற்கொண்டு வருகிற மனிதாபிமான முறுகல் மற்றும் போர் நடவடிக்கைகள், காசா மண்டலத்தை உணவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கபடும் நிலைக்கு தள்ளியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 பேர் – அதில் நான்கு குழந்தைகள் – பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.