அல்பெர்டா மாகாணத்தில் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல்
அல்பெர்டாவின் வெயின் ரைட் நகரில் அண்மையில் நடந்த தனியார் சமூக நிகழ்வில், இரு கனடிய ராணுவ உறுப்பினர்கள் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் ஜூலை 17, வியாழக்கிழமை இரவில், வெயின் ரைட் நகரில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றது.
இது ஒரு பெரும் கூட்டம் கலந்து கொண்ட நீடித்த மோதலின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், சம்பவம் குறித்து நள்ளிரவில் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் அந்த இடத்துக்கு சென்றபோது, காயமடைந்த இருவரும் ஏற்கனவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படும் அளவில் முழுமையாக மீள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் சம்பவம் நடந்த வீட்டில் வசிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.