கனடாவில் அறையில் தங்கியிருந்த நண்பரைக் கொன்றரவருக்கு நீதிமன்றம் தண்டனை
கனடாவின் சஸ்காடூனில், தனது அறையில் தங்கியிருந்த நண்பரை கொலை செய்த நாடர் பட்டர் (Nader Butter) என்பவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜனவரி 30ம் திகதி காலை 7:30 மணியளவில் இடம்பெற்றது.
அதில் 35 வயதான ஸ்டெபன் போல் (Steffen Pohl) என்பவர், தனது வீட்டில் தலையில் பலமுறை சுத்தியால் அடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். நாடர் பட்டர், படுகொலை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளின் ஒப்பந்தக் கூற்று (agreed statement of facts) மூலம், குற்றம் நிகழ்ந்த போது அவர் மது மற்றும் 'மாஜிக் மஷ்ரூம்கள்' எனும் போதை மருந்துகளால் மயக்க நிலையிலிருந்ததாக குறிப்பிடப்பட்டது.
2025 ஜூன் மாதத்தில் நடந்த தண்டனை விசாரணையின் போது, அரசு தரப்பு சட்டத்தரணிகள் ஏற்கனவே சிறையில் கழித்த நாட்களை கணக்கில் கொண்டு, 11.3 ஆண்டுகள் சிறைதண்டனை கோரினர்.
பிரதிவாதியின் தரப்போ, சிக்கலான நெறிச்சாய்வு நிலையை (moral culpability) முன்னிறுத்தி, ஒரு நாள் சிறை + 3 ஆண்டு நிபந்தனைக்குட்பட்ட விடுதலை என மிகவும் குறைந்த தண்டனையை கோரியது.
ஏற்கனவே சிறையில் கழித்த நாட்களை கழித்துக் கொண்டு மீதமுள்ள தண்டனை காலம் – 9 ஆண்டுகள் 4 மாதங்கள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.