மார்ட்டின் லூதர் கிங் படுகொலை சம்பவம்; அமெரிக்க அரசு வெளியிட்ட ரகசிய ஆவணங்கள்
சிவில் உரிமைகள் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் படுகொலை தொடர்பான ரகசிய ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், 230,000 பக்க ஆவணங்கள் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆவணங்களில், எஃப்.பி.ஐ. மற்றும் சிஐஏ ஆகியவை கிங்கை தொடர்ந்து கண்காணித்த விவரங்கள் உள்ளன.
FBI தலைவர் ஜே. எட்கர் ஹூவரின் உத்தரவால் கிங் மீது தவறான தகவல்களும் ஒளிவு பிழைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1977 முதல் இந்த ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவால் மறைக்கப்பட்டிருந்தன. கிங்கின் குடும்பம் இந்த வெளியீடு குறித்து வருந்தியுள்ளதுடன் அவரது நற்பெயருக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
1999 இல் ஒரு அமெரிக்க நீதிமன்றம் கிங், ஒருவரால் மட்டும் அல்ல பரந்த சதித்திட்டத்தின் கீழ் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. ஜேம்ஸ் ஏர்ல் ரே என்பவர் இந்தக் கொலையில் குற்றவாளியாக குறிக்கப்பட்டாலும் பின்னர், அவர் ஒரு சதிக்குள்ளாகியதாக கூறி வாக்குமூலத்தை மாற்றினார்.
அமெரிக்க மக்கள் உண்மையை அறிந்து கொள்ள இந்த ஆவண வெளியீடு தேவையான ஒன்றாகும். இந்த வெளியீடு வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான முன்னேற்றம் என அரசினர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
ஆவணங்களில் காணப்படும் புதிதாக வெளிவந்த CIA குறிப்புகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் கிங் குடும்ப உறுப்பினர் ஆல்வேடா கிங், இந்த வெளியீட்டை வரலாற்று முன்னேற்றமாக வரவேற்றுள்ளார்.
அமெரிக்க மக்கள் அறியாத சதிகள் மற்றும் உண்மைகள் இதில் வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரிலேயே இந்த ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்து.