வடகொரியாவில் தடை செய்யப்பட்ட படத்தை பார்த்த 14 வயது சிறுவனுக்கு கிடைத்த தண்டனை
வடகொரியாவில் தடை செய்யப்பட்ட சினிமாவை 5 நிமிடம் பார்த்த குற்றத்திற்காக அந்நாட்டு அரசு 14 வயது சிறுவனுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்க மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் வடகொரியாவுக்கு எதிரி நாடுகள் என்பதால் அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்தும் வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் கொரியாவில் வெளியான 'தி அங்கிள்' திரைப்படம் பிரபலமானது. இதையடுத்து வடகொரியாயில் உள்ள யாங்காங் மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த சிறுவன் ஹைசன் சிட்டியின் தொடக்க பள்ளி வளாகத்தில் தடை செய்யப்பட்ட திரைப்படத்தை 5 நிமிடம் பார்த்ததாக கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து பள்ளி கூடத்தில் வைத்தே பொலிஸ் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.
அந்த வகையில் அந்த சிறுவன் செய்த குற்றத்திற்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் கொரிய திரைப்படங்கள், பதிவுகள், புத்தகங்கள், பாடல்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை நேரடியாகப் பார்த்தாலோ அல்லது கேட்டாலோ 15 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.