பயணிகளுக்கு நட்டஈடு வழங்கும் எயார் கனடா
எயார் கனடா விமான சேவை நிறுவனம் தனது பயணிகளுக்கு நட்டஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல், உணவு, தரைவழி போக்குவரத்து மற்றும் பிற செலவுகளை ஈடு செய்ய உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 15 முதல் 23 வரை இடம்பெற்ற தொழிற்சங்கப் போராட்டத்தினால் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட அல்லது தாமதமான வாடிக்கையாளர்களுக்கு "நியாயமான" தங்குமிடம் மற்றும் ஏனைய செலவுகளை எயார் கனடா ஈடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களிடமும் நாங்கள் மனமார்ந்த மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளது.
மேலும் பயணத்தின் போது தவிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்," என எயார் கனடா தெரிவித்துள்ளது.
இந்த இழப்பீடு கோரிக்கைகள் ரசீதுகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        