கனடா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், வியாழக்கிழமை அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவை சந்தித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியாக இந்த பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹெய்ட்டி மற்றும் காஸா நிலைமைகள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேற்குக் கரையில் இஸ்ரேல் ஒரு குடியேற்றத் திட்டத்தை அனுமதித்ததற்கு கனடிய வெளியுறவு அமைச்சர் ஆனந்த் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 20 பிற வெளியுறவு அமைச்சர்களுடன் இணைந்து இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர்களின் கூட்டு கடிதத்தில், இந்தத் திட்டம் "இரு-நாடு தீர்வை சாத்தியமற்றதாக்கும்" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.