வின்னிபிக்கில் இரண்டு சிறுவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
வின்னிபிக்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வின்னிபிக்கின் சென் ஜேம்ஸின் ஹம்ஹெர்ட்ஸ் வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு உள்ளா அல்லது வீதியிலா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 17 வயதான மற்றுமொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
தவறுதலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இதனை கருத முடியாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைச் சம்பவமொன்று என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.