பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில், தற்போது பிரித்தானியாவும் ஆதரிப்பதாக பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பாலஸ்தீன அரசை தாம் ஆதரிப்பதாகவும் , மேலும் இதுபோன்ற நீண்டகால அரசியல் தீர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம் எனவும் ஆனால் இப்போது, இன்று, துன்பத்தைத் தணிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் காசாவில் உள்ள தீவிரமான, நியாயப்படுத்த முடியாத துன்பங்களை நாங்கள் கையாள்கிறோம் எனவும் அதுதான் இன்று நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் அறிவித்டதிருந்த நிலையில் இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.