கெட்டமைன் ராணிக்கு 15 ஆண்டுகள் சிறை; அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!
உலகப்புகழ் பெற்ற 'Friends' தொடரின் நாயகன் மேத்யூ பெர்ரியின் (Matthew Perry) மரணத்திற்கு காரணமான ஜஸ்வீன் சங்காவுக்கு (Jasveen Sangha) அமெரிக்க நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
42 வயதான ஜஸ்வீன் சங்கா, லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் செல்வந்தர்களுக்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்யும் ஒரு "பேரங்காடியையே" (Drug Emporium) நடத்தி வந்துள்ளார்.

ஜஸ்வீன் சங்காவுக்கு (Jasveen Sangha) வீட்டில் இருந்து நூற்றுக்கணக்கான கெட்டமைன் குப்பிகள், கொக்கேயின் மற்றும் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஜஸ்வீன் சங்காவுக்கு (Jasveen Sangha) வீட்டில் உள்ள குளியல் தொட்டியில் மேத்யூ பெர்ரி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
மேத்யூ பெர்ரி (Matthew Perry) 'கெட்டமைன்' எனும் போதைப்பொருளை அதிகப்படியாகப் பயன்படுத்தியதாலேயே உயிரிழந்தமை மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.