மட்டக்களப்பில் 18 வயதுடைய காதலனால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்
மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை 18 வயதுடைய காதலன் கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந் நபரை எதிர்வரும் 12 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டுள்ளார்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 15 வயதும் 9 மாதம் கொண்ட சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக அவரை அவரது பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஆரம்ப பரிசோதனை
இதன்போது ஆரம்ப பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் கர்ப்பம் தரித்துள்ளதாக கண்டறிந்தனர்.
அச் சிறுமி அதேபிரதேசத்தைச் சேர்ந்த கராச் ஒன்றில் வேலை செய்துவரும் 18 வயதுடைய காதலனுடன் ஏற்பட்ட உறவு காரணமாக கர்ப்பமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவ் இளைஞனை நேற்று 29ம் திகதி கைது செய்த பொலிஸார் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அவரை 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.