பாகிஸ்தான் அடுக்குமாடி கட்டிடத்தில் எரிவாயு வெடித்ததில் 16 பேர் பலி
பாகிஸ்தானின் தெற்கே சிந்த் மாகாணத்தில் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென இன்று எரிவாயு வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளதுடன் பலர் காயமடைந்து உள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மற்றும் மீட்பு அதிகாரிகள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி ரிஸ்வான் பட்டேல் என்ற பொலிஸ் அதிகாரி கூறும்போது, கட்டிட இடிபாடுகளை அகற்றி யாரேனும் உள்ளே சிக்கி இருக்கிறார்களா? என தேடும் பணி தொடர்ந்து வருகிறது என கூறினார்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
கராச்சி நகரில் பல வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. அதன் உதவியுடன் சமையல் செய்யப்படுகிறது. எனினும், சில வீடுகளில் சிலிண்டர்களும் உபயோகத்தில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.