அமெரிக்காவில் வாகன விபத்துகளில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் வானிலை தொடர்பான வாகன விபத்துகளில் சிக்கி இதுவரையில் 16 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், அந்நாட்டில் வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து போயுள்ளது.
வானிலை தொடர்பான மாற்றங்களால் பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளாகின.
ஓஹியோவின் டொலிடோ பகுதியருகே நடந்த இந்த சம்பவத்தில் இருபுறமும் சாலைகள் வாகனங்களால் தேங்கி காணப்பட்டன.
இதனை தொடர்ந்து சாலையில் உறைபனியில் சிக்கி விடாமல் இருக்க வாகனங்களில் இருந்து இறங்கிய பலர் பேருந்துகளை பிடித்து செல்ல வேண்டியிருந்தது. இந்த விபத்து சம்பவத்தில் மொத்தம் 16 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கென்டகி பகுதியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என கவர்னர் ஆண்டி பெஷீர் நேற்று கூறியுள்ளார். மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்புடன் இருக்கும்படியும் அவர் கேட்டு கொண்டதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.