15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழந்த அவலம்!

Food Shortages Refugee Spain Africa Death
By Sulokshi Aug 05, 2026 01:29 PM GMT
Report

   வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு சென்றுகொண்டிருந்த படகு நடுவழியில் பழுதானதில் அதிலிருந்த 17 அகதிகள் 15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி தத்தளித்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஸ்பெயின் செய்தி நிறுவனம் நேற்று (04) வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் மல்லோர்கா தீவுக்கு தென்மேற்கே 12.7 நாட்டிக்கல் மைல் தொலைவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் படகு ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை ஸ்பெயின் கடற்படை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழந்த அவலம்! | 17 Refugees Ship Sea 15 Days Without Food Spain

ஹெலிகாப்டர் மூலம்  தீவிர தேடுதல் 

தாங்கள் பயணித்த படகில் மொத்தம் 19 பேர் இருந்ததாகவும், இன்ஜின் பழுதாகி 15 நாட்களாகக் கடலில் தத்தளித்ததால் உணவு மற்றும் தண்ணீரின்றி மற்ற 17 பேரும் இறந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்பெயினின் இபிஸா தீவுக்கு தென்மேற்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் 15 வட ஆப்பிரிக்க அகதிகளுடன் வந்த மற்றொரு படகை மீட்புக் குழுவினர் மீட்டனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3,935 அகதிகளுடன் 211 படகுகள்ஸ் பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்பிரிக்க எல்லைப் பகுதியான செவுடாவில் அகதிகள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் மொராக்கோவில் இருந்து சுமார் 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்தனர்.

இதில் இதுவரை 70,000 பேர் செவுடாவிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், எல்லையைக் கடக்கும் முயற்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. மனித கடத்தல் கும்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளே இந்த மனித உரிமை நெருக்கடிக்குக் காரணம் என ஸ்பெயின் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US