துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவன் சரண்
ஸ்காப்ரோ துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதான சிறுவன் போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.
பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் குறித்த சிறுவனுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் ஜெபர்சான் பீட்டர் என்ற 18 வயது சிறுவனை துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிறுவன் போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.
ஸ்காப்ரோவின் ஒவ்வொரு பாடசாலைக்கு எதிரில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஜெபர்சன் என்ற 18 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சிறுவன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.