பிரேசிலில் இவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி! வெளியான முக்கிய அறிவிப்பு
பிரேசிலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டி படைத்து வருகின்றது. அந்த வகையில் தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தொற்று மோசமாக தாக்கி வருகின்றது.
இதனால் அந்நாட்டு அரசு தங்கள் மக்களை கொரோனா வைரஸில் இருந்து காக்க தடுப்பூசிகள் செலுத்தும் பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். இதையடுத்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 60வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இனி பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளலாம் என அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி மார்செலோ குயிரோகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோசை பெற்று கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க முடிவு செய்துள்ளோம் என கூறினார்.