கனடாவில் காணாமல் போன நபர் பல நாட்களின் பின் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு
கனடாவில் காணாமல் போன நபர் பல நாட்களின் பின்னர் தெய்வாதீனமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சுமார் இரண்டு வாரங்களாக காணாமல் போயிருந்த ஒருவர், தொலைதூர காட்டுப் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டதாக அவரை மீட்டவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 27 அன்று அவருடனான கடைசி தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஜூலை 31 அன்று அவர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பல நாட்களாக குறித்த நபரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஹெலிகொப்டரின் உதவியுடன் வில்லியம்ஸ் என்ற காணாமல் போன நபரை அதிகாரிகள் கண்டு பிடித்து மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட நபர் மிகவும் பலவீனமாக இருந்தார் எனவும் வெளிக்காயங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பதற்கு ஒரு நாள் பிந்தியிருந்தால் அவரை உயிருடன் மீட்டிருக்கக் கூடிய சாத்தியங்கள் குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
39 வயதான குறித்த நபர் , குளத்தில் உள்ள நீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்துள்ளார்.
மேலும் உடைகளை புல்லால் நிரப்பி வெப்பமாக இருக்க முயன்றார்.
குறித்த நபர் ஒரு பாறையின் அருகில் நின்று கொண்டிருந்தார், அதில் இருபுறமும் "உதவி" என்று எழுதியிருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.