இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் இரங்கல்
கனடாவின் ஒட்டாவாவில் இலங்கைர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.
படுமோசமான ஓர் வன்முறைச் செயல் எனவும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு சமூகம் உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வாறான நெருக்கடியான தருணங்களில் கனடியர்கள் வழமையாகவே உதவுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்வார்கள் எனவும் அது குறித்த தகவல்களை வெளியிடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியெவ் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.