டொமினிகன் குடியரசில் கனடிய இளைஞர் சுட்டுக்கொலை – இருவர் கைது

Canada
By Kamal Mar 26, 2026 03:55 AM GMT
Report

கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் விடுமுறைக்காக சென்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக டொமினிகன் குடியரசில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ட்ரிஸ்டன் பிரைமோ போய்ட்ராஸ் (Tristan Primeau Poitras) என்ற இளைஞர், மார்ச் 23ஆம் திகதி தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, புவெர்டோ பிளாட்டா – மைமோன் நெடுஞ்சாலையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு தேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த போது அவர் தற்காலிகமாக ரியூ பச்சாட்டா (Riu Bachata) ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

டொமினிகன் குடியரசில் கனடிய இளைஞர் சுட்டுக்கொலை – இருவர் கைது | 2 Arrested In Dominican Republic After Quebec

இந்த வழக்கில், 23 வயதான ஜோர்டி யூனியர் செவேரியானோ மற்றும் 30 வயதான ராங்கல் மெரெட்டே ரொட்ரிகஸ் ஆகியோர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது அவருடன் இருந்த அவரது சகோதரர், அடையாள அணிவகுப்பில் இந்த இருவரையும் அடையாளம் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள், இளைஞரும் அவரது சகோதரரையும் தடுத்து கொள்ளையடிக்க முயன்றதாகவும், அந்த நேரத்தில் அவர்களில் ஒருவரால் சுடப்பட்ட குண்டே மரணத்திற்கு காரணமானதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தற்போது இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள் துறை, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு தூதரக உதவிகளை வழங்கி வருவதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US