கனடாவில் சிறிய விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு
பிரிடிஷ் கொலம்பியாவின் சில்லிவாக்கில், சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சில்லிவாக் ஏரிக்கரை அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விழுந்து கிடந்த செஸ்னா 172 வகை விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக சில்லிவாக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்," என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்துத் தகவலைத் தொடர்ந்து, கனடிய ஆயுத படைகளின் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Joint Rescue Coordination Centre - JRCC) உயிரிழந்தவர்களை அந்த இடத்திலிருந்து மீட்க நடவடிக்கைகள் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானத்துடனான தொடர்பு முழுமையாக இழக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Transportation Safety Board of Canada) மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மரண விசாரணை சேவையும் (B.C. Coroner’s Service) இந்த விபத்து குறித்த விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களது விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.