அமெரிக்காவில் அதிர்ச்சி ; சிறுமிகளை காதலனுக்கு விருந்தாக்கிய பெண் பராமரிப்பாளர்
அமெரிக்காவில் குழந்தைகளை பராமரிக்கும் இளம்பெண், தன்னிடம் வந்த சிறுமிகளை தனது காதலன் வன்கொடுமை செய்ய அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பெரும்பாலும் ஒரு வீட்டில் உள்ள தாய், தந்தை இருவருமே வேலைக்கு செல்லும் நிலையில் தங்களது குழந்தைகளை பராமரிக்க பேபி சிட்டர் எனப்படும் குழந்தை பராமரிப்பாளர்களை பணியமர்த்துவது வழக்கமாக உள்ளது.
அமெரிக்காவில் பெரும் பரபரப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாண்டியாகோவில் வசித்து வரும் பிரிட்னி மே லியான் என்ற இளம்பெண் பேபி சிட்டராக (Baby Sitter) இருந்து வந்த நிலையில், அவரிடம் பலரும் தங்கள் வீட்டு பிள்ளைகளை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் 7 வயது சிறுமி ஒருவர் இனி ப்ரிட்னியிடம் செல்ல மாட்டேன் என தன் தாயாரிடம் அழுத்துள்ளார். விசாரித்ததில் ப்ரிட்னியின் காதலன் சாமுவேல் என்ற நபர் அந்த 7 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை வீடியோவும் எடுத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
அதை தொடர்ந்து சாமுவேலை பொலிஸார் கைது செய்து விசாரித்தபோது, அவரது செல்போனில் ஏராளமான சிறுமிகளை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
அதை தொடர்ந்து சாமுவேலையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ப்ரிட்னியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.